என்.எல்.சி.யில் பழைய தளவாடங்களால் உருவாக்கப்பட்ட கன்வேயர்!

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பழைய தளவாடங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கன்வேயர் அமைப்பு வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பழைய தளவாடங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கன்வேயர் அமைப்பு வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. 
நெய்வேலி அருகே உள்ள தனியார் மின் நிலையத்துக்கும், சிமென்ட் உற்பத்தி தொழில்சாலைக்கும் பழுப்பு நிலக்கரி வழங்குவதற்காக நெய்வேலியில் சுரங்கம் 1}ஏ தொடங்கப்பட்டது. இங்கு ஆண்டுக்கு 30 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்தச் சுரங்கத்தின் நிலக்கரி சேமிப்புப் பகுதியிலிருந்து, புதிய அனல்மின் நிலையம், முதல் அனல்மின் நிலையத்துக்கு பழுப்பு நிலக்கரி கொண்டு செல்ல வசதியாக 832 மீ நீளத்தில் கன்வேயர் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்தக் கன்வேயரை அமைக்க தேவையான பெல்டுகள், சட்டங்கள், உருளைகள், அதிக மின்னழுத்த கேபிள்கள், டிரைவ் ஹெட் எனப்படும் மோட்டார்கள் என அனைத்தும் பழைய தளவாட பாகங்களிலிருந்து பெறப்பட்டதாம். 1,500 மி.மீ. அகலமுள்ள பெல்டுகளை கொண்ட இந்தக் கன்வேயர் மணிக்கு சுமார் 
ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரியை கொண்டு செல்லும் திறனுடையது.  இந்த கன்வேயர், டிரைவ் ஹெட் இயந்திரத்தை முற்றிலும் புதிதாக அமைக்கும்பட்சத்தில் சுமார் ரூ.18 கோடி வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது. 
ஆனால், என்எல்சி இந்தியா நிறுவனப் பொறியாளர்களும், ஊழியர்களும் இதற்காக புதிய பொருள்கள் ஏதும் வாங்காமல் நிறுவனத்துக்கு சுமார் 
ரூ.18 கோடியை சேமித்துள்ளனராம் .
கன்வேயர் அமைப்பின் தொடக்க விழா சுரங்கம் 1}ஏ பழுப்பு நிலக்கரி சேமிக்கும் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவன பொறுப்புத் தலைவர் ராக்கேஷ் குமார் கன்வேயர் அமைப்பை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மின் துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன், மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி டி.வெங்கடசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் எஸ்.ஏ.எஃப்.காலித், ஹேமந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com