ஜிப்மரில் நோயாளிகளுக்கு ஏர் ஆம்புலன்ஸ் சேவை: விரைவில் அறிமுகம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் நோயாளிகளை துரிதமாகக் கொண்டு செல்வதற்கான, ஏர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜிப்மரில் நோயாளிகளுக்கு ஏர் ஆம்புலன்ஸ் சேவை: விரைவில் அறிமுகம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் நோயாளிகளை துரிதமாகக் கொண்டு செல்வதற்கான, ஏர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 பொன் விழா கண்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 6000 படுக்கை வசதிகள் உள்ளன. நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
 எம்பிபிஎஸ் செவிலியர் பொது சுகாதாரம் என பல்வேறு பாடப்பிரிவுகளும் இங்கு கற்பிக்கப்படுகின்றன.
 மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஜிப்மர் சிறந்த அரசு மருத்துவமனைகளில் நாட்டிலேயே 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
 புதுச்சேரி, தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக ஜிப்மரை நாடி வருகின்றனர். ஜிப்மர் நிர்வாகம் சார்பில் நோயாளிகள், பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களும், சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
 இந்த நிலையில் ஆபத்துக்காலத்தில் உள்ள நோயாளிகளை விரைவாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல உதவும் ஏர் ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 மேலும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான சர்வதேச மையம், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவை அமைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் பரிஜா கூறியதாவது: ஏர் ஆம்புலன்ஸ் நாட்டிலேயே அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்படும் சிறப்புத் திட்டமாக இருக்கும். மூன்று திட்டங்களுக்கான அனுமதி வரும் ஆட்சி மன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்படும்.
 ஏர் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கும் நிறுவனம் கண்டறியப்பட்டுள்ளது.
 இதற்கான நிதி சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் திரட்டப்படும்.
 சர்வதேச உடல் உறுப்புகள் மாற்று மையத்துக்கு 70 முதல் 80 ஏக்கர் நிலம் தேவைப்படும். இதுதொடர்பாக புதுச்சேரி மாநில அரசிடம் கோரப்படும்.
 நாள்தோறும் விபத்துகளில் காயமடைவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜிப்மரில் தனியாக நவீன அவசர சிகிச்சைப் பிரிவை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார் பரிஜா.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com