குழந்தைகளுக்கான நோய்த்தொற்று: ஜிப்மரில் இன்று கலந்துரையாடல் அமர்வு

ஜிப்மர் மருத்துவமனை சுகாதார கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று வராமல் தடுப்பது எப்படி,

ஜிப்மர் மருத்துவமனை சுகாதார கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று வராமல் தடுப்பது எப்படி, நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன என்ற தலைப்பில் கலந்துரையாடல் அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

 இதில் குழந்தை நல மருத்துவ வல்லுநர்கள், நோய்த் தடுப்பு சமூக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் குழந்தை நல மருத்துவ சமூக சேவகர் ஆகியோர் மூலம் விளக்கம் தரப்படும். இந்த கலந்தாய்வு நிகழ்ச்சி ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகம் மூன்றாவது மாடி கருத்தரங்கக்கூடத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

 பெற்றோர்களும், குழந்தை பெற்ற தாய்மார்களும், கர்ப்பிணிப்பெண்களும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com