லூர்து மாதா தேவாலய பெருவிழா தொடக்கம்

வில்லியனூர் லூர்து மாதா தேவாலயத்தின் 140-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வில்லியனூர் லூர்து மாதா தேவாலயத்தின் 140-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிறப்பு மிக்க வில்லியனூர் லூர்து மாதா திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா, ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த 6-ஆம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
நிகழாண்டுத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி, காலை 5.30 மணிக்கு ஆலய வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அருள்நிறை ஆலயத்தில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அங்குள்ள குளத்தைச் சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்றது.
நாள்தோறும் நவநாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் தேர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 30-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு ஆடம்பர திருவிழா தேர் பவனி நடைபெற உள்ளது.
மே 1-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலிக்குப் பின்னர், கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வில்லியனூர் திருத்தல அதிபர் ரிச்சர்ட் அடிகளார் தலைமையில், விழாக் குழுவினர், பங்குப் பேரவை, இளைஞர் இயக்கம், தன்னார்வக் குழுவினர், திருத்தல பக்தர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com