பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மென்திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் ரூசா திட்டத்தின் கீழ், " விலங்கியல் மென்திறன் மேம்பாடு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் ரூசா திட்டத்தின் கீழ், " விலங்கியல் மென்திறன் மேம்பாடு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 கல்லூரி முதல்வர் பூங்காவனம் தலைமை வகித்தார். ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளரும் வேதியியல் துறைத் தலைவருமான சுப்பிரமணி நோக்கவுரை ஆற்றினார்.
 புதுவை அன்னை தெரேசா சுகாதார முதுநிலை - ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் கோபால், புதுவை பல்கலை. உயிர் தகவலியல் மையத்தின் பேராசிரியை அமுதா, சுற்றுச்சூழல் ஆலோசகர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ விஞ்ஞானிகளுக்கு மென்திறன் பயிற்சியளித்தனர். மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கமளித்தனர்.
 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரிப் பேராசிரியர்கள் திருமாவளவன், மலர்விழி, கந்தமணி ஆகியோர் செய்திருந்தனர் . செயல் தலைவர் முத்து நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com