டிச.10-இல் பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா

புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா டிச.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா டிச.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 இது குறித்து பாரதிதாசனின் பேரனும், இந்த அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான கவிஞர் கோ.பாரதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா, பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் டிச.10-ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது.
 பாரதியார் கவிதைகளும், பாவேந்தரும் என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு கவிஞர் பாரதி தலைமை வகிக்கிறார். விழாவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்த பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் என்ற தலைப்பிலான உரையரங்கம் நடைபெறுகிறது.
 பாவேந்தர் இலக்கிய வரிசையில் பாவேந்தர் இயற்றிய பாடல்கள் என்ற தலைப்பில் பேராசிரியர் பட்டம்மாள் உரையாற்றுகிறார். கைவினைக் கலைஞர் வெ.கி.முனுசாமி விழாவில் பாராட்டப்படுகிறார். பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி என்ற தலைப்பிலான கவியரங்கில் கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசிக்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com