ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரிக்கை

கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று

கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு கோரிக்கை விடுத்தது.
 இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ஆனந்த கணபதி வெளியிட்ட அறிக்கை:
 டிசம்பர் 2-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் ஊராட்சி ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை டிசம்பர் 3-ஆவது வாரத்தில் வெளியிடுவதாக உறுதி அளித்தனர்.
 எனவே, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டுப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மத்திய தலைவர்கள் ஆகியோர் கூடி விவாதித்து போராட்டத்தை டிச. 17-ஆம் தேதி வரை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 அதே நேரம் 23 மாதங்கள் கடந்த பின்பும், உள்ளாட்சித் துறை ஊழியர்கக்கு 1.1.2016 முதல் வழங்க வேண்டிய 7-ஆவது ஊதியக் குழு மீதான அரசின் ஆணையை அமலாக்க உத்தரவு வெளிவராதபட்சத்தில், முன்னறிவிப்பு ஏதுமின்றி தள்ளிவைக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டத்தை டிச.18-ஆம் தேதி தொடங்குவது என்று கூட்டுப் போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.
 எனவே, முதல்வரும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிபடி, 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உரிய காலத்தில் அமல்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com