தியாகிகளுக்கு அரசு சன்மானம் அளிக்க கோரிக்கை

இந்தியாவின் 70-ஆம் விடுதலை ஆண்டில் கலைமாமணி, தியாகிகளுக்கு அரசு சன்மானம் அளித்து கெளரவிக்க வேண்டும் என பாரதிதாசன் அறக்கட்டளை விழாவில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவின் 70-ஆம் விடுதலை ஆண்டில் கலைமாமணி, தியாகிகளுக்கு அரசு சன்மானம் அளித்து கெளரவிக்க வேண்டும் என பாரதிதாசன் அறக்கட்டளை விழாவில் வலியுறுத்தப்பட்டது.
 பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் கலை, இலக்கிய திங்கள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை வகித்தார். கோ.தென்னவன் முன்னிலை வகித்தார். முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
 இந்தியாவின் 70-ஆவது விடுதலை ஆண்டில் கலைமாமணி, தியாகிகளுக்கு அரசு சன்மானம் அளித்து கெளரவிக்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 மறுமலர்ச்சி தந்த மறைலையடிகள் என்ற தலைப்பில் வே.பூங்குழலி உரையாற்றினார். காமராஜரின் மேன்மைகள் என்ற கவியரங்கத்தை வழக்குரைஞர் வெ.வைத்திலிங்கம் தொடக்கி வைத்தார்.
 மூத்த மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் பாராட்டப்பட்டார். முனைவர் நாக.செங்கமலத்தாயார் முகப்புரை ஆற்றினார். இரா. அன்பழகன் வரவேற்றார்.
 ஆசிரியை வைத்தி கஸ்தூரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com