புதுவை பல்கலை.யில் உலக சமூகப் பணி நாள் விழா

புதுச்சேரி பல்கலைக்கழக சமூகப்பணித் துறை சார்பில் உலக சமூகப் பணி நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி பல்கலைக்கழக சமூகப்பணித் துறை சார்பில் உலக சமூகப் பணி நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 நீடித்த நிலைத்த சமூகம் மற்றும் சுற்றுப்புற சூழலை ஊக்குவித்தல் ஆகும். சமூகப் பணித் துறைத் தலைவர் ஷாகின் சுல்தானா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் கி.அன்பு துறையின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். சமூக அறிவியல் மற்றும் பன்னாட்டுக் கல்வி புல முதன்மையர் பேராசிரியர் வெங்கட்ட ரகோத்தம் தலைமை வகித்துப் பேசியதாவது:
 அகதிகள் நெருக்கடி, சமூகப் பணியாளர்கள் பங்கு குறித்து விவரித்தார். மேலும், சமூகப் பணி என்பது சர்வாதிகாரத்தை அகற்றும் முயற்சியாகவும், சமத்துவம், சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என்றார்.
 உயிரி தொழில்நுட்பத் துறை முனைவர் ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். திண்டிவனம் புனித அன்னாள் கலைக் கல்லூரி முதல்வர் ஏ.ஜே.கிறிஸ்டோபர் பேசுகையில், மாணவர்கள் தங்களது அறிவை நேர்மறை சிந்தனையில் முறைப்படுத்தி சமூக மாற்றத்துக்கு வழிகோல வேண்டும் என்றார்.
 ஷாசன் ஆலை மனிதவள மேலாளர் மரிய பிரான்சிஸ் மனிதவளத் துறை அனுபவங்களை விளக்கினார். ஜிப்மர் மருத்துவ சமூகப் பணியாளர் சித்ர லேகா, மனநல சமூகப் பணியில் வேலை செய்யும் நுணுக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார். சமூகப் பணித் துறை மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com