புதுவை பள்ளிகளில் மாணவர் தின விழா

புதுச்சேரியில் பல்வேறு பள்ளிகளில் மாணவர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியில் பல்வேறு பள்ளிகளில் மாணவர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 புதுவை முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் பள்ளி சார்பில் மாணவர் தின விழா நடைபெற்றது. துணை ஆணையர் (ஓய்வு) ஆபேல் ரொசாரியோ பேரணியை தொடக்கி வைத்தார். துணை முதல்வர் பேபி சித்ரா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லலிதா முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் பிரகாஷ் ராஜா, சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தின விழாவுக்கு துணை முதல்வர் மேகலா பேசின் தலைமை வகித்தார். ஆசிரியர் அரிவரதன் வரவேற்றார். கண்காணிப்பாளர் மூ.வீரப்பன், தலைமை ஆசிரியர் க.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 தமிழாசிரியர் மு.வெற்றிவேல், விரிவுரையாளர் இரா.வித்யா ஆகியோர் மாணவர் தின உரையாற்றினர். ஆசிரியை பிரகதீஸ்வரி நன்றி கூறினார்.
 பாகூர் கஸ்தூரிபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு துணை முதல்வர் கம்சகலா தலைமை வகித்தார். விரிவுரையாளர் ராஜகோபால் வரவேற்றார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் காமராஜரின் சிறப்புகள் குறித்து விவரித்தார்.
 மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் செல்வகுமரன் தொகுப்புரை ஆற்றினார்.
 புதுவை நெல்லித்தோப்பு மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் பாஸ்கரராசு தலைமை வகித்தார்.
 ஆசிரியை அமலோர்பவ மேரி வரவேற்றார். ஆசிரியர் கிருஷ்ணராஜ் நோக்கவுரை ஆற்றினார். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சாந்தி தொகுப்புரைஆற்றினார்.
 பாகூர் தாலுகா சோரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் வாஞ்சிநாதன் வரவேற்றார்.
 இளைஞர் இயக்கம் சுபகணேஷ் முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் மு.வெற்றிவேல்100 மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com