வேளாண் விற்பனைக் குழு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி வேளாண்மை விற்பனைக்குழு ஊழியர் சங்கங்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் திங்கள்கிழமை அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி வேளாண்மை விற்பனைக்குழு ஊழியர் சங்கங்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் திங்கள்கிழமை அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.
 நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் நடைபெற்றன.
 2 முறை விற்பனைக்குழு நிர்வாகத்துடனும், வேளாண் செயலர், விற்பனைக் குழுத் தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
 இதைக் கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 24-ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளவும், ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டது.
 இதன்படி, திங்கள்கிழமை தட்டாஞ்சாவடியில் உள்ள விற்பனைக்குழு அலுவலகத்தில் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
 இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருள்கள் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com