மதுக் கடை திறக்க எதிர்ப்பு: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட பெண்கள்

பாகூரில் மதுபானக் கடைகளை குடியிருப்புப் பகுதியில் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை அப்பகுதி பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பாகூரில் மதுபானக் கடைகளை குடியிருப்புப் பகுதியில் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை அப்பகுதி பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 164 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே மூடப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், மதுபானக் கடைகளை பாகூர் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் குடியிருப்புப் பகுதியில் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுபோராட்டம் மேற்கொண்டனர்.
 அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பெண்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து அளித்தனர். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com