நிகர்நிலைப் பல்கலை.கள் மீண்டும் விதிமீறல்: இடம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி

மருத்துவப் பட்ட மேற்படிப்புத் தேர்வு செய்த இடங்கள் கிடைக்காமல் நிகர்நிலைப் பல்கலை.களின் விதிமீறலால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மருத்துவப் பட்ட மேற்படிப்புத் தேர்வு செய்த இடங்கள் கிடைக்காமல் நிகர்நிலைப் பல்கலை.களின் விதிமீறலால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
 மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான சென்டாக் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீடாக பெற்ற 159 இடங்களில் 114 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை ஆணை பெற்றனர்.
 இந்த நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் கேட்டதால் மாணவர்கள் சேர முடியாமல் தவித்தனர்.
 இதுதொடர்பாக வழக்குரைஞர் மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கையை ஜூன் 19-ஆம் தேதி முடிக்க வேண்டும். சென்டாக் மூலம் தேர்வான மாணவர்கள் ரூ. 10 லட்சம் சேர்க்கைக் குழுவிடம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
 இதையடுத்து, மாணவர்கள் சென்டாக் அலுவலகத்தில் கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிகர்நிலைப் பல்கலை.களில் மாணவர்கள் சேருவதற்காக சென்றபோது, சென்டாக் கலந்தாய்வில் மாணவர்கள் தேர்வு செய்த இடங்கள் தற்போது காலியாக இல்லை. அந்த இடங்களை கடந்த
 31-ஆம் தேதியே நிரப்பிவிட்டோம். வேண்டுமெனில் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து படிக்கலாம் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் விரும்பிய முதுநிலை மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
 இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாகப் பெற்ற பாடப் பிரிவுகளை நாங்கள் தேர்வு செய்திருந்தோம். ஆனால், அந்தப் பாடப் பிரிவுகளில் வேறு மாணவர்களைச் சேர்த்துவிட்டதாகவும், வேறு பாடப் பிரிவுகளில் சேர்ந்துகொள்ளுமாறும் கூறுகின்றனர்.
 நாங்கள் தேர்வு செய்த இடத்தை எப்படி வேறு மாணவர்களுக்கு வழங்க முடியும்? தொடர்ந்து, தனியார் மருத்துவக் கல்லூரிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன. நாங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேர முடியாமல் தவித்து வருகிறோம். இதில், அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com