சர்க்கார் விரைவு ரயிலை புதுவை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் சர்க்கார் விரைவு ரயிலை, புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் சர்க்கார் விரைவு ரயிலை, புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புதுவை முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தினர்.
 காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட்ட சர்க்கார் விரைவு ரயில் தற்போது செங்கல்பட்டு சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனாம் பிராந்திய மக்கள் தங்களது தேவைகளுக்காக புதுச்சேரிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.
 செங்கல்பட்டு வரை சர்க்கார் ரயிலில் செல்வதின் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. கூடுதல் செலவு தான் ஏற்படுகிறது. அங்கிருந்து பேருந்து மூலம் புதுவை வர வேண்டியது.
 மேலும், கொல்கத்தா செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் சாமல்கோட்டை ரயில் சந்திப்பில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
 மேலும், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஆகியோரையும் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி, தில்லி பிரதிநிதி ஜான்குமார், அரசுச் செயலர் பி.ஆர்.பாபு ஆகியோர் சந்தித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com