புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில். சேர்க்கை

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2017-18-ஆம் ஆண்டுக்கான எம்.பில்., சேர்க்கை நடைபெறுகிறது.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2017-18-ஆம் ஆண்டுக்கான எம்.பில்., சேர்க்கை நடைபெறுகிறது.
ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.) முழு நேரப்படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இலக்கியம், மொழியியல், மானுடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பாடப் பிரிவுகளில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயில விரும்பும் மாணவர்கள் முதுநிலைப் படிப்பில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேம்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் 50 சதவீதம் பெற்றால் போதும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளங்கலை, முதுகலை மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் 2 படிகள் சான்றளிக்கப்பட்டு இணைத்தல் வேண்டும்.
மேலும் பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு ரூ.300-க்கான வரைவோலை இணைக்கவேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் சாதிச் சான்றிதழை இணைத்து ரூ.150-க்கு வரைவோலை எடுத்தால் போதும்.
மேற்கூறிய அனைத்து இணைப்புகளுடன் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் வரும் 10.7.17-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியர் முதன்மைச் சாலை, லாசுப்பேட்டை, புதுச்சேரி-8.
தொலைபேசி, 0413-2255817, 2255827, இ-மெயில்-pilc.py@gov.in..
இத்தகவலை இயக்குநர் பக்தவத்சல பாரதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com