ஜிப்மரில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக சராசரியாக 20 நோயாளிகள் காத்திருப்பு: இயக்குநர் பரிஜா தகவல்

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக சராசரியாக 20 நோயாளிகள் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாக ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி. பரிஜா தெரிவித்தார்.
ஜிப்மரில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக சராசரியாக 20 நோயாளிகள் காத்திருப்பு: இயக்குநர் பரிஜா தகவல்

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக சராசரியாக 20 நோயாளிகள் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாக ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி. பரிஜா தெரிவித்தார்.
 ஜிப்மரில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மருத்துவ புற்றுநோயியல் துறையால் ஜனவரி மாதம் 2013-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அந்த சிகிச்சையின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பெற்று நலமுடன் வாழும் நோயாளிகளை இயக்குநர் டாக்டர் பரிஜா கெüரவித்தார்.
 அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மற்றும் தமிழகத்தை பொருத்தமட்டில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளும் ஒரே அரசு நிறுவனம் ஜிப்மர் ஆகும். பல்வேறு நிதி திட்டங்கள் மூலம் இங்கு வரும் ஏழைநோயாளிகளுக்கு இந்த அதிநவீன சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்த சிகிச்சை சர்வதேச தரத்துடன் வழங்கப்படுகிறது.
 சராசரியாக 15 முதல் 20 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். இத்துறை விரிவாக்கத்தால் காத்திருப்புப்பட்டியல் குறையும். மேலும் இந்தத் துறையை 8 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டம் உள்ளது. ரத்தப்புற்று நோயியல், ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையில் உயர்கல்வி வருகிற ஜுலை 2017 முதல் நடைமுறைக்கு வரும் என்றார்.
 எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்மித்தாகாயல் கூறுகையில:
 ஸ்டெம்செல்ஸ் மூலம் செயல்படுத்தப்படும் இந்த சிகிச்சை மிக நுட்பமானதும், தனித்துவம் பெற்றதாகும். ரத்தவங்கி, மருத்துவ குருதியியல், கதிரியக்க சிகிச்சை, நோயியல், நுண்ணுயிரியல், நோய் எதிர்ப்பியல் மற்றும் மருந்தியல் போன்ற பல்வேறு மருத்துவ நிபுணர்களை கொண்டு கூட்டு சிகிச்சையாக வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் இதுவரை 67 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
 எலும்பு மஜ்ஜை மாற்றுசிகிச்சைப் பெற்றவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
 ஜிப்மர் மருத்துவகல்லூரி முதல்வர் சுவாமிநாதன், ஆராய்ச்சி முதல்வர் டாக்டர் விஷ்ணுபட், மருத்துவ புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் பிஸ்வஜித் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com