23-ல் ஆர்ப்பாட்டம், பேரணி: அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23-ல் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்படும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23-ல் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்படும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
 அதன் பொதுச் செயலாளர் மு.பிரேமதாசன், கெüரவத் தலைவர் பாலமோகனன் ஆகியோர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறிய
 தாவது: 7-வது ஊதியக் குழு பரிந்துரையில் ஊழியர்களுக்கு எதிரான அம்சங்களை மாற்ற வேண்டும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி வாக்குறுதியின்படி குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும், வீட்டு வாடகைப்படி, இதர படிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23-ம் தேதி தில்லியில் மத்திய நிதி அமைச்சர் அலுவலகம் முன் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. புதுவையில் இருந்து 10 நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
 புதுவையிலும் 7-வது ஊதியக்குழு 8 மாத ஊதிய நிலுவைத் தொகை தரப்படவில்லை. உள்ளாட்சி, தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைவாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 23-ம் தேதி கம்பன் கலையரங்கில் இருந்து தலைமை தபால் நிலையத்துக்கு பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com