"சென்டாக் விண்ணப்ப பதிவிறக்க நாளை ஜூன் 15 வரை நீட்டிக்க வேண்டும்'

சென்டாக் விண்ணப்ப பதிவிறக்க தேதியை ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்டாக் விண்ணப்ப பதிவிறக்க தேதியை ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 சங்க நிர்வாகிகள் மு.நாராயணசாமி, பொருளாளர் வி.சி.சி நாகராஜன் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
 சென்டாக் மூலம் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்ந்தால் மறு ஆண்டு வேறு எந்தப் படிப்புகளிலும் சேர முடியாது என்று சென்டாக் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதனை நீக்க வேண்டும் ஏன் என்றால் மாணவர்கள் சென்ற ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்க்கை கமிட்டி மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைத்தும், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் கேட்டு மருத்துவக் கல்லூரிகள் புதுவை மாணவர்களை சேர்க்க மறுத்து, குறைந்த மதிப்பெண் பெற்ற வெளி மாநில மாணவர்களை சேர்த்தன.
 அதற்கு அரசு ஒரு காரணமாக அமைந்து விட்டது. காரணம் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருந்து விட்டது.
 ஆகவே, மருத்துவப் படிப்பு மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சென்ற ஆண்டு நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் ஓர் ஆண்டு வீணடிக்கக் கூடாது என்பதற்காக சென்டாக் மூலம் படிப்பை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 ஆனால், மருத்துவக் கனவில் உள்ள மாணவர்கள் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளனர் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21-ன்படி, புதுச்சேரி அரசு சென்டாக் மூலம் தேர்வான மாணவர்கள் மறு ஆண்டு மருத்துவம் படிக்க சேரலாம் என்று திருத்தம் கொண்டுவர வேண்டும்.
 மேலும் 30-5-2017 வரை சென்டாக் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 5-6-2017 வரை நேரடியாக சென்டாக் அலுவலகத்தில் கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
 ஆனால், மத்தியில் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. அதுமட்டுமன்றி சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் மாதக் கடைசியில் வெளியிடப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 நீட் தேர்வு முடிவுகள் 8-6-2017 அன்றுதான் வெளியாக உள்ளது. அதனால் சென்டாக் விண்ணப்ப பதிவிறக்கம் தேதியை 30-5-2017-க்குப் பதிலாக 15-6-2017 வரை நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com