பொரா குளம் தூர் வாரும் பணி தொடக்கம்

உப்பளம் தொகுதியில் பழைமையான பொரா குளம் தூர் வாரும் பணியை அன்பழகன் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

உப்பளம் தொகுதியில் பழைமையான பொரா குளம் தூர் வாரும் பணியை அன்பழகன் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
 வாணரப்பேட்டை, தமிழ்த்தாய் நகரில் உள்ள பொரா குளம் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குளமாகும். இந்தக் குளத்தால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி நிலத்தடி நீர் மட்டம் இருந்தது. ஆனால், காலப்போக்கில் குளம் சிதிலமடைந்து விட்டது. குளத்தை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
 இந்த நிலையில், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித் துறை மூலம் தூர்வாரும் பணியை அன்பழகன் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.
 இதற்கான நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சுவாமிநாதன், நீர்ப்பாசன கோட்டப் செயற்பொறியாளர் தாமரைபுகழேந்தி, உதவிப் பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 குளத்தின் கரைகளை பலப்படுத்தவும், குளத்தின் நடுவில் சுவாமி சிலைகளை வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com