ஏனாமில் அரசு செவிலியர் கல்லூரிக்கு அனுமதி

ஏனாமில் அரசு செவிலியர் கல்லூரி தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

ஏனாமில் அரசு செவிலியர் கல்லூரி தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுதில்லியில் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்த பின், ஏனாம் திரும்பிய அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏனாமில் அரசு செவிலியர் கல்லூரி தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. தில்லியில் மத்திய சுற்றுலாத் துறைச் செயலர், இணைச் செயலரை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர்களிடம், ஏனாம் சுற்றுலாத் திட்டங்கள் தொடர்பான திட்ட வரைவை அளித்தேன்.
மத்திய அரசு அதிகாரிகளின் ஆலோசனைபடி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட 4 பிராந்தியங்களை உள்ளடக்கிய ரூ. 100 கோடி மதிப்பிலான ஆன்மிக, பாரம்பரிய சுற்றுலாத் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட திட்ட வரைவு அளிக்கப்படும்.
ஜூன் 6-இல் வெற்றி விழா: புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, ஓராண்டாவதன் வெற்றி விழாக் கொண்டாட்டம் ஜூன் 6-ஆம் தேதி ஏனாமில் நடைபெறும். அப்போது, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவை குறித்து நூல் வெளியிடப்படும். ஏனாமில் இந்திய விளையாட்டு ஆணையம் சாய் பயிற்சி மையம் திறக்கப்படும். குரியம்பேட்டை கிராமத்தில் புதிய மேல்நிலைப் பள்ளி நிகழ் கல்வியாண்டில் திறக்கப்படும் என்றார் மல்லாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com