இன்று ஜிப்மர் மருத்துவ பட்டமேற்படிப்பு நுழைவுத் தேர்வு

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெறுகிறது.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெறுகிறது.
தேர்வுகள் (எம்.டி., எம்.எஸ்.,) காலை 10:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை 8 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 29 தேர்வு மையங்களில் (இதில் 7 மையங்கள் புதுச்சேரியில் அமைந்துள்ளன) நடைபெறுகிறது.
மேலும், சிறப்பு உயர்நிலை ஆராய்ச்சி பிரிவுகளில்  தேர்வுகளுக்கு காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை 2 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 தேர்வு மையங்களில் (இதில் ஒரு மையம் புதுச்சேரியில் அமைந்துள்ளது) நடைபெறுகிறது.
முதுநிலை மருத்துவம் (டி.எம், எம்சிஎச்) தேர்வுகள் பிற்பகல் 3:00 மணி முதல் 4:30 மணி வரை 2 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 3 தேர்வு மையங்களில் (இதில், 2 மையங்கள் புதுச்சேரியில் அமைந்துள்ளன) நடைபெறுகிறது.
மருத்துவ பட்டமேற்படிப்பு (எம்.டி, எம்.எஸ்.) தேர்வுகளுக்கு 12,852 பேரும், (டி.எம், எம்சிஎச்) போன்ற தேர்வுகளுக்கு 1,494 பேரும் மற்றும் (பிடிஎப்) தேர்வுகளுக்கு 413 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் எம்.டி, எம்.எஸ் பிரிவுகளில் 105 இடங்களும், டி.எம், எம்சிஎச் பிரிவில் 19 இடங்களும் மற்றும் சிறப்பு உயர்நிலை ஆராய்ச்சிப் பிரிவுகளில் 25 இடங்களும் உள்ளன.
இரண்டு தேர்வுகளின் முடிவுகளும் வருகிற 31-ஆம் தேதி வெளியாகும். இதற்கான கலந்தாய்வுகள் எம்.டி, எம்.எஸ் போன்றவற்றுக்கு ஜூன் 14-ஆம் தேதியும், டி.எம், எம்சிஎச், சிறப்பு உயர்நிலை ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஜூன் 9-ஆம் தேதியும் நடைபெறும். வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com