உழவர்கரை நகராட்சியில் 7 வார்டுகள்  திறந்தவெளிக் கழிப்பில்லாத பகுதிகள்

உழவர்கரை நகராட்சியில் மேலும் 7 வார்டுகள் திறந்தவெளியில் மலம் கழிப்பில்லாத பகுதிகளாக அறிவிக்கப்படும் என, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தார்.

உழவர்கரை நகராட்சியில் மேலும் 7 வார்டுகள் திறந்தவெளியில் மலம் கழிப்பில்லாத பகுதிகளாக அறிவிக்கப்படும் என, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, அவர் பேசியதாவது: புதுச்சேரி நகராட்சியில் 9 வார்டுகள், உழவர்கரையில் 7 வார்டுகள், காரைக்காலில் 3 வார்டுகள், மாஹேயில் 15 வார்டுகள், ஏனாமில் 4 வார்டுகள் ஏற்கெனவே திறந்த வெளியில் மலம் கழிப்பில்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உழவர்கரை நகராட்சியில் மீதமுள்ள 7 வார்டுகளும் தற்போது மலம் கழிப்பில்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட உள்ளன. வருகிற ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது திறந்தவெளியில் மலம் கழிப்பில்லாத பகுதிகளாக முதல்வர் நாராயணசாமி அறிவிப்பார். தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், திலாசுப்பேட்டை, இந்திரா நகர், மீனாட்சிபேட்டை, எல்லைப்பிள்ளைச்சாவடி, ஜவஹர் நகர் உள்ளிட்ட 7 வார்டுகள் இதில் அடங்கும் என்றார் நமச்சிவாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com