தீயணைப்பு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலர் சுப்பிரமணியன், அமைப்புச் செயலர் சசிக்குமார், துணைச் செயலர் வீரப்பன் முன்னிலை வகித்தனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், 8 மணி நேர வேலை, தீயணைப்புத் துறைக்கு இயக்குநர் பதவியை உருவாக்குதல், 15 நாள்கள் விடுப்பு சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.
தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரியும், மாஹே, ஏனாம் மற்றும் காரைக்கால் பிராந்திய மாற்றல் கொள்கை ஓராண்டாக உள்ளதை நிரந்தர ஆணையாக வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதேபோல, கூடுதல் வேலைநேரப்படியை ரூ. 10,000-ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும். இரவு பணிப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாள்கள் ஓய்வு வழங்க வேண்டும், தீயணைப்புத் துறைக்கு புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருகிற 15-ஆம் தேதிக்குள் தீர்வு காணவில்லையென்றால் 30-ஆம் தேதி வரை தீயணைப்புப் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும். அலுவலக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள மாட்டோம். அப்படியும் தீர்வு காணப்படவில்லை என்றால், டிசம்பர்
1-ஆம் தேதி முதல் தீயணைப்பு வீரர்களே 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com