நீராதாரங்களை சீரமைக்க நிதி நிறுவனங்களை அணுக வேண்டும்: கிரண் பேடி அறிவுறுத்தல்

நீராதாரங்களை சீரமைக்க நிதி பெற ஏதுவாக நிதி நிறுவனங்களை உள்ளாட்சித் துறை அணுக வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.

நீராதாரங்களை சீரமைக்க நிதி பெற ஏதுவாக நிதி நிறுவனங்களை உள்ளாட்சித் துறை அணுக வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.
முத்திரையர்பாளையத்தில் உள்ள வண்ணான் குளத்தில் ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் குளத்துக்குச் செல்லாத வகையில் இருந்த அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வண்ணான்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களை சீரமைக்க நபார்டு, ஹட்கோ உள்ளிட்ட நிதி நிறுவனங்களை அணுகி புதுப்பிக்க வேண்டும். இது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை தயாரித்து நிதி நிறுவனங்களையும், மத்திய அரசையும் அணுக வேண்டும் என்றார்.
பின்னர், புதுச்சேரி வழுதாவூர் சாலை காந்தி நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் குறித்து வந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்தார்.அப்போது அதிகாரிகள் மார்க்கெட் வளாகம் திறக்கப்பட்டும் இங்கேயே விற்பனை செய்வதாக தெரிவித்தனர். அதேசமயம் வியாபாரிகள் மக்கள் அங்கு வராததால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸாரை அழைத்து உடனடியாக சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்களை மார்க்கெட் வளாகத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர், காந்திநகர் மார்க்கெட் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, துப்புரவுப் பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது கூடுதல் செயலர் சீனுவாஸ், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com