2018-க்குள் 45 ஆயிரம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் கமலக்கண்ணன்

2018-ஆம் ஆண்டு அக்டோபருக்குள் புதுவையில் 45 ஆயிரம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும் என விவசாயத் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.

2018-ஆம் ஆண்டு அக்டோபருக்குள் புதுவையில் 45 ஆயிரம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும் என விவசாயத் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சேதராப்பட்டு கிராமத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருவது குறித்து வியாழக்கிழமை அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பிடி.ருத்ரகெüடு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.
 பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 45,403 கழிப்பறைகள் தேவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் 19,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டு கழிப்பறைகள் கட்ட பணி ஆணைகள் தரப்பட்டுள்ளன. இதுவரை 3,000 வீடுகளில் கழிப்பறைகள் முழுமையாகக் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
 வருகிற 2018-ஆம் ஆண்டு அக்டோபருக்குள் 45 ஆயிரம் வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு விடும். இதைத் தீவிரமாக நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருகிறது.
 திறந்த வெளியில் மல, ஜலம் கழிப்பதால் பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, கழிப்பறை கட்டும் திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக தேவை. புதுவையில் மணல் தட்டுப்பாடு உள்ளது.
 எனவே, முதல்வர் நாராயணசாமியின் அனுமதியோடு, உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயமும், நானும் தமிழகம் சென்று புதுவை, காரைக்காலுக்கு சட்டப்பூர்வமாக மணலைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம் என்றார் கமலக்கண்ணன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com