அரசுக் கல்லூரிகளின் செயல்பாடுகள்: அமைச்சர் ஆய்வு

புதுவையில் அரசுக் கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து கல்வி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

புதுவையில் அரசுக் கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து கல்வி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 லாஸ்பேட்டை பிப்மேட் கருத்தரங்கக் கூடத்தில் உயர் கல்வித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். உயர் கல்வித் துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
 மத்திய பணியாளர் தீர்ப்பாயம், நீதிமன்றங்களில் உயர் கல்வித் துறை கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களால் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், ராஷ்டீரிய உச்சாதர் சிக்ஷா அபியான் (ரூசா) திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
 மேலும், கல்லூரிகளின் தற்போதைய நிர்வாகம், அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், 2017 - 18 ஆம் கல்வியாண்டுக்கான நிதித் தேவை, பணியாளர்களின் குறைபாடுகள், கல்லூரிப் பேராசிரியர்களின் பணி குறிப்புப் பதிவேடுகள், மதிப்பீடு ஆகியவை பற்றியும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com