திமுக சார்பில் ரத்த தான முகாம்

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், தெற்கு மாநில திமுக சார்பில் ஒரு மாத காலம் வரை நடைபெறும் ரத்த தான முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், தெற்கு மாநில திமுக சார்பில் ஒரு மாத காலம் வரை நடைபெறும் ரத்த தான முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
 புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு தீவிரமாக உள்ளது. ஏற்கெனவே 4 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இந்த நோய் பாதிப்பால் ரத்த தட்டணுக்கள் குறையும். இதனால், அதிகம் அளவில் ரத்தம் தேவைப்படும். பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவுக்கு ரத்தம் வழங்கி வருகின்றனர்.
 இதன் தொடர்ச்சியாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, புதுவையில் தெற்கு மாநில திமுக சார்பில், அரசுப் பொது மருத்துவமனையில் ரத்த தான முகாம் தொடங்கியது.
 கட்சியின் மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
 நிர்வாகிகள் அனிபால் கென்னடி, குணா திலீபன், தைரியநாதன், இளங்கோவன், மாறன், வேலவன், சக்திவேல், உள்பட பலர் பங்கேற்றனர். இந்த ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர், இளைஞர்கள், பொதுமக்கள் ரத்த தானம் செய்தனர். தெற்கு மாநிலத்தில் உள்ள 12 தொகுதிகளைச் சேர்ந்தவர்களும் ரத்த தானம் வழங்க உள்ளனர். முதல் கட்டமாக உருளையன்பேட்டைதொகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த ரத்த தான முகாம் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் நடைபெறும் என சிவா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com