புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு: எச்.ராஜா குற்றச்சாட்டு

புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது என்பது இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) நடவடிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக

புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது என்பது இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) நடவடிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா குற்றஞ்சாட்டினார்.
 இதுகுறித்து புதுச்சேரியில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
 இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
 புதுவையில் கடந்த ஆண்டு 700 }க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடாகச் சேர்க்கப்பட்டதால், அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.
 இதன் மூலம், புதுச்சேரி அரசு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய அளவில் ஊழல் புரிந்துள்ளது தெரிய வருகிறது. மாணவர்கள் நலனில் புதுவை அரசுக்குத் துளியும் அக்கறையில்லை.
 யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது. இதனை உணர்ந்து முதல்வர் நாராயணசாமி ஆளுநருடன் இணக்கமாகச் செயல்பட வேண்டும். மோதல் போக்குடன் செயல்படுவதால் நிர்வாகச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
 புதுச்சேரியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால்தான் டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தங்க வைத்துள்ளனர்.
 தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க தினகரன் ஆதரவு உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் அரசுகள் ஆதரவளிக்கின்றன.
 சசிகலா அதிகாரத்துக்கு வர நினைத்ததன் காரணமாகவே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதிமுகவின் எந்த ஒரு செயலிலும் பாஜகவின் தலையீடு இல்லை. அகில இந்தியத் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அது மாநிலத்தில் செயல்படுத்தப்படும்.
 நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஏற்ககெனவே குறிப்பு கொடுத்துள்ளது. அதை மாநில அரசு செயல்படுத்தும் என்றார் ராஜா.
 கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், பொதுச் செயலர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com