மாமூல் வசூலித்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கை

மாமூல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்தார்.

மாமூல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்தார்.
சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காவல் துறை தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்தார்.
தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, டி.ஜி.பி. சுனில்குமார் கெளதம், கூடுதல் உள்துறைச் செயலர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதுநிலை எஸ்.பி.க்கள் ராஜீவ் ரஞ்சன், அபூர்வா குப்தா, எஸ்.பி.க்கள் வெங்கடசாமி, அப்துல் ரகீம், குணசேகரன், ரக்சனா சிங், மஞ்சம் பிரசாத் ராவ், பன்வால், கொண்டா வெங்கடேஸ்வர ராவ் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும், லாட்டரி சீட்டு, கஞ்சா விற்பனையைத் தடுப்பது, குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸார் தீவிர ரோந்துப் பணியை மேற்கொள்வது, காவலர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்துக்குப் பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து டி.ஜி.பி. சுனில்குமார் கெளதம் விளக்கமாகக் கூறினார். காவல் துறைக்குத் தேவைப்படும் நிதியுதவி பற்றியும், காவல் துறையை நவீனப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.
புதுவை மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குற்றச் செயல்கள் நடப்பதற்கு முன்பாகவே அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி நகர் பகுதி மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளிலும் ரோந்து செல்ல வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும். கடந்த ஆண்டை விட நிகழாண்டு குற்றங்கள் குறைந்துள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.
குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் காவல் துறை முனைந்து செயல்பட்டு வருகிறது. காவல் துறையில் கீழ் மட்டத்தில் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும்.
ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகையின் போது காவல் துறையினர் கடைகளுக்குச் சென்று மாமூல் கேட்பதை முழுமையாக ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com