முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கோரிக்கை

மாணவர் சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம்

மாணவர் சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
விதிமுறைகளை மீறி, முறைகேடான வகையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடுகளை அப்பட்டமாக உறுதிசெய்துள்ளது.
அதே நேரம் இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்துள்ள நடவடிக்கையானது அப்பாவி மாணவர்களை மட்டும் தண்டித்து, தனது வர்க்க குணத்தை வெளிப்படுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்றம் மருத்துவ மாணவர் சேர்க்கையை வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாக நடத்திட அறிவுறுத்தியது. பல்கலைக்கழக மானியக் குழுவும், மாநில அரசும் நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியது. ஆனால், ஒருங்கிணைந்த தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படவில்லை. மாறாக, கல்லூரி நிர்வாகங்கள் கோரும் பணத்தைக் கொடுக்கும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே நிகர்நிலைப் பல்கலை.கள், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடமிருந்து பல கோடி ரூபாயைக் கல்லூரி நிர்வாகங்கள் பெற்றுள்ளன.
நீட் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்வது, மாணவர் சேர்க்கை நடைபெறுவதை முறைப்படுத்துவது, கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மாநில அரசு மூலம் செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் சுகாதாரத் துறைச் செயலர், துறை இயக்குநர் உள்ளடக்கிய மாணவர் சேர்க்கைக் குழு, தனது கடமையைச் செய்யத் தவறி உள்ளது. மாறாக, மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களின் லாப வெறிக்குத் துணைபோயிருக்கிறது. இந்த முறைகேடுகள் சுகாதாரத் துறை அமைச்சருக்குத் தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை.
ஆகவே, மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேட்டுக்கு நிகர்நிலைப் பல்கலை.கள், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும், மாநில அரசு அதிகாரிகளும், மாநில அரசுமே முழு பொறுப்பேற்க வேண்டும்.
விதிமுறைகளை மீறிய கல்லூரி நிர்வாகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்திடவும், நடைபெற்றுள்ள முறைகேட்டில் யார், யாருக்குத் தொடர்புள்ளது என்பது குறித்து நீதி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திட உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com