மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பிரசார யாத்திரை: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வியாழக்கிழமை பிரசார பாதயாத்திரை நடத்த உள்ளதாக அக்கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் தெரிவித்தார்.

புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வியாழக்கிழமை பிரசார பாதயாத்திரை நடத்த உள்ளதாக அக்கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் தெரிவித்தார்.
 இதுகுறித்து, அவர், புதன்கிழமை புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டில் முறைகேடாக பணம் குவிக்கப்பட்டுள்ள 500 இந்திய அரசியல்வாதிகள், முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக, செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயர் பட்டியல் உச்ச நீதிமன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெளியிட வலியுறுத்தியும், மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் நடைபெறுவதைக் கண்டித்தும், பெரு நிறுவனங்களின் ரூ.81 ஆயிரம் கோடி வராக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்வதை கண்டித்தும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும் வியாழக்கிழமை புதுச்சேரியில் 10 மையங்களில் பிரசார பாதயாத்திரை நடைபெற உள்ளது.
 புதுச்சேரியில் கடும் நிதி நெருக்கடி உள்ளதால், மத்திய அரசிடம் புதுச்சேரிக்கு உள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். ஜிஎஸ்டியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அளித்துள்ள சலுகையை புதுச்சேரிக்கும் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
 புதுவையில் குடிநீர், மின்சாரம், வீட்டு வரிகளை உயர்த்தியுள்ளதுடன், குப்பைகளை அகற்றுவதற்கு தனி வரி வசூலித்து வருகின்றனர். இதனால் சாதாராண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
 நீட் தேர்விற்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் இப்பிரசாரத்தில் வலியுறுத்தப்பட உள்ளது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com