"உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் கிடைத்தால் காரைக்காலில் விவசாயம் செழிக்கும்' 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நீர் கிடைத்தால், காரைக்காலில் விவசாயம் செழிக்கும் என்று வேளாண் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நீர் கிடைத்தால், காரைக்காலில் விவசாயம் செழிக்கும் என்று வேளாண் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
 புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: கடந்த 1970-களில் கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் முழுமையாக வந்த போது, 20 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. தொடர்ந்து, நீர் வராததால் விவசாய நிலங்கள் சுருங்கி, தற்போது 6 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்றாலும், விவசாயம் சார்ந்த பணிகள் பறிபோனது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7 டி.எம்.சி. காவிரி நீர் உரிய காலத்தில் கிடைத்தால், காரைக்காலில் விவசாயம் செழிக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com