புதுவை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மூலம் ரூ.6.84 லட்சம் வசூல் 

புதுச்சேரி மலர் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் மூலம் ரூ.6.84 லட்சம் வசூலாகியுள்ளது.

புதுச்சேரி மலர் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் மூலம் ரூ.6.84 லட்சம் வசூலாகியுள்ளது.
 கண்காட்சியை 3.50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் அரசு சார்பில் 32-ஆவது மலர், காய்கறி, கனி கண்காட்சி பிப்.2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் புணே, ஒசூர் பகுதியில் இருந்து தருவிக்கப்பட்ட மலர்கள், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு சிறப்பு மலர்கள் இடம் பெற்றிருந்தன. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மலர்களால் உருவாக்கப்பட்ட நகரம் போன்ற தோற்றம் இடம் பெற்றிருந்தது. வேளாண்துறை, வேளாண் அறிவியல் நிலையம், பாண்லே, பாசிக் மற்றும் தனியார் நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன. மானிய விலையில் மரக்கன்று, உரம் விற்பனை செய்யப்பட்டது. ரூ.90 லட்சம் செலவில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 3 நாள்கள் நடைபெற்ற கண்காட்சியை சுமார் 3.50 லட்சம் பேர் பார்வையிட்டனர். நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரூ.6.84 லட்சம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக தாவரவியல் பூங்காவுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படும்.
 இந்தக் கண்காட்சியை முன்னிட்டு ரூ.10ஆக நுழைவுக் கட்டணம் குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.6 லட்சத்து 84, 730 வருவாய் கிடைத்துள்ளது. விவசாயிகள், 12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. விவசாயிகள், சிறுவர்கள் 2.5 லட்சத்துக்கு மேல் பார்வையிட்டனர். இவர்கள் தவிர 68,400 பேர் நுழைவுக் கட்டணம் செலுத்தி கண்காட்சியை பார்வையிட்டனர் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com