தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு அட்டவணை வெளியீடு 

தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான அட்டணை வெளியிடப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழக தட்டச்சுப் பயிலகங்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வைத்திநாதன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுருக்கெழுத்து தேர்வு கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு தொழில்நுட்பக் கல்லூரியில் மட்டும் நடைபெறுகிறது.
 தமிழ் சுருக்கெழுத்து இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் பிப்.17-ஆம் தேதியும், ஆங்கில சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் பிப்.18-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
 அதைத் தொடர்ந்து, வருகிற பிப்.24-ஆம் தேதி தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலைத் தேர்வுகள் 4 அணிகளாகவும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலைத் தேர்வின் 1-ஆவது அணியாகவும், பிப்.25-ஆம் தேதி இளநிலை தேர்வின் 5-ஆவது அணியும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்வு 3 அணிகளாகவும் நடக்கிறது.
 மேலும், பிப்.25-ஆம் தேதி ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் உயர் வேகத்தேர்வு (ஹை ஸ்பீடு) நடக்கிறது. புதுவையில் மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 2 மையங்களிலும், கடலூர் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரியிலும், சிதம்பரத்தில் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியிலும், நெய்வேலியில் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியிலும், விருத்தாசலத்தில் அரசு செராமிக் கல்லூரி ஆகிய 4 மையங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் விபிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, திண்டிவனத்தில் பி.வி. பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 2 மையங்களிலும் தட்டச்சுத் தேர்வு நடக்கிறது.
 மேலும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலைத் தேர்வும், 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு (அல்லது) 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலை தேர்வும் எழுதுகின்றனர். தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் உயர்வேகத் தேர்வு எழுதுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com