மின்னணு பணப் பரிவர்த்தனை: மாதிரி கிராமங்கள் தத்தெடுப்பு

இந்தியன் வங்கி சார்பில், புதுவையில் மின்னணு பணப் பரிவர்த்தனை மாதிரி கிராமங்கள் புதன்கிழமை தத்தெடுக்கப்பட்டது.

இந்தியன் வங்கி சார்பில், புதுவையில் மின்னணு பணப் பரிவர்த்தனை மாதிரி கிராமங்கள் புதன்கிழமை தத்தெடுக்கப்பட்டது.
 பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைவருக்கும் மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
 இதன்படி, இந்தியன் வங்கி புதுவையில் உள்ள ஐந்து கிராமங்களை தேர்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு மின்னணு வங்கிச் சேவைகள் குறித்து விளக்கம் அளித்து மாதிரி கிராம திட்டமாக செயல்படுத்துகிறது.
 இந்த ஐந்து கிராமங்களில் உள்ள வங்கிக் கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு, பயிற்சி விளக்கம் அளிப்பதுடன், வணிகர்கள் இதை எளிமையாக கடைப்பிடிக்கும் வகையில் அவர்களுக்கு கையடக்க பண வசூல் இயந்திரம் வழங்குதல், செல்லிடப்பேசி மூலம் பிம் செயலி விளக்கம், பீம் ஆதார் செயல்பாடு ஆகிய செயல் முறை பயிற்சியும் அளிக்க உள்ளது.
 இதற்கான தொடக்க விழா பனையடிகுப்பம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 இந்தியன் வங்கியின் மண்டல மேலாளரும், அனைத்து வங்கி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பி.வீரராகவன் வரவேற்றார்.
 மின்னணு வங்கி சேவை மற்றும் கிராம வளர்ச்சி வங்கி சேவைகள் குறித்து வங்கியின் பொது மேலாளர்கள் வி.எ. பிரசாந்த், டி.தேவராஜ் ஆகியோர் பேசினர்.
 புதுவை அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறைச் செயலர் டி.மணிகண்டன், மாநில அரசின் தொழில்நுட்ப தகவல் தொடர்பு வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார்.
 இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.பட்டாசாரியா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு முத்ரா, மகளிர் சுயஉதவிக் குழு, விவசாயத் திட்டத்தின் கீழ் கடனுதவிகளை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com