பிளஸ் 2 தேர்வு: புதுவையில் 17,000 பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 தேர்வை புதுவை மாநிலத்தில் 17,000 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, நிகழாண்டு முதல் முறையாக அரசு பொதுத்தேர்வாக நடத்தப்படும் பிளஸ் 1 தேர்வை 

பிளஸ் 2 தேர்வை புதுவை மாநிலத்தில் 17,000 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, நிகழாண்டு முதல் முறையாக அரசு பொதுத்தேர்வாக நடத்தப்படும் பிளஸ் 1 தேர்வை 15 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.
 தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-இல் தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழாண்டு பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு முறையை தமிழக கல்வி வாரியம் அமல்படுத்தி உள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 முதல்
 ஏப்.16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு நாள் பட்டியலை கல்வி வாரியம் முன்கூட்டியே வெளியிட்டு விட்ட நிலையில், செய்முறை தேர்வுகளும் முடிவடைந்து விட்டன.
 புதுச்சேரியில் 44 அரசுப் பள்ளிகள், 85 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14,705 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 1,886 தனித்தேர்வர்களும் அடங்குவர்.
 காரைக்காலில் 10 அரசு, 12 தனியார் பள்ளிகளில் பயிலும் 2,662 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
 புதுவை, காரைக்காலில் மொத்தம் 17,367 மாணவ- மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இதற்காக புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களும், காரைக்காலில் 8 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 பிளஸ் 1 பொதுத் தேர்வை புதுச்சேரியில் 13,019 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர். இதில் 15 தனித் தேர்வர்கள் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் காரைக்காலில் 2,004 மாணவர்கள் பிளஸ்1 பொதுத் தேர்வை முதன்முதலாக எழுத உள்ளனர்.
 இத்தேர்வை புதுவை, காரைக்காலில் மொத்தம் 15,423 பேர் எழுதுகின்றனர். இதனிடையே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 16 தொடங்கி ஏப். 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் மாநில கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 மாணவர்களுக்கு இணையதளம் மூலம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com