தட்டச்சு தேர்வு: 2,400 பேர் பங்கேற்பு

புதுச்சேரியில் 2 மையங்களில் தொடங்கிய தட்டச்சு தேர்வில் சுமார் 2,400 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தொடர்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு நடைபெறுகிறது.

புதுச்சேரியில் 2 மையங்களில் தொடங்கிய தட்டச்சு தேர்வில் சுமார் 2,400 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தொடர்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு நடைபெறுகிறது.
தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு பிப்.24, 25-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி புதுச்சேரியில் மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 2 மையங்களிலும் தட்டச்சு தேர்வு தொடங்கியது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலைத் தட்டச்சு தேர்வு காலை 8.30 முதல் 9.35 மணி வரை, 10.15 முதல் 11.20 மணி வரை, பகல் 12 முதல் 1.05 மணி வரை, பிற்பகல் 1.45 முதல் 2.50 மணி வரை என 4 பிரிவுகளாக நடைபெற்றன. தொடர்ந்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தட்டச்சு தேர்வு மாலை 3.30 மணி முதல் 4.50 மணி வரை ஒரே பிரிவாக நடைபெற்றது.
இந்தத் தேர்வுகளில் 2,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் அதன் முதல்வர் உதயகுமார் தலைமையில் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக ஆண்டனி லியோ, முரளிதாஸ் ஆகியோர் செயல்பட்டனர். அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தலைமை தேர்வு மையக் கண்காணிப்பாளராக மீனாட்சிசுந்தரம், உதவி கண்காணிப்பாளர்களாக சாயிகுமார், குமரன் ஆகியோர் செயல்பட்டனர்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) இளநிலையில் ஒரு பிரிவுக்கும், முதுநிலையில் 3 பிரிவுகளுக்கும் தட்டச்சு தேர்வு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com