பிரெஞ்சிந்திய சங்கங்களின் கூட்டமைப்புக்கு புதிய தலைவர் தேர்வு

பிரெஞ்சிந்திய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவராக பேராசிரியர் பா.தசரதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரெஞ்சிந்திய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவராக பேராசிரியர் பா.தசரதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு நாட்டில் இயங்கும் இந்திய நாட்டின் பல்வேறு மொழி, சமுதாய, கலாசார அமைப்புகளின் கூட்டமைப்பாக பிரெஞ்சிந்திய சங்கங்களின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. பாரீஸ் தமிழ்ச் சங்கங்கள் உள்பட பிரெஞ்சு நாட்டில் இயங்கும் தமிழ், தெலுகு, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு சமுதாயம், மொழி, கலாசாரம் சார்ந்த 52 அமைப்புகள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பாக இது இயங்கி வருகிறது.
இந்தக் கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜன.10-ஆம் தேதி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் பா.தசரதன் (74) கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் புதுச்சேரி மாநில தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த தசரதன், புதுவையில் பிரெஞ்சு மொழியில் பள்ளிப் படிப்பை பக்லோரியா வரை முடித்தவர்.
பிரெஞ்சு சென்ற அவர், அங்குள்ள சர்வதேச கலா சாலையில் கணித பட்டமேற்படிப்பு படித்தார். கல்லூரியில் கற்கும்போதே அங்குள்ள கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர். பின்னர் கணித பேராசிரியராக நீண்ட காலமாக பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுப்பெற்றார். இப்போது பாரீஸ் நகரில் வாழ்ந்து வருகிறார்.
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், பிரெஞ்சிந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான புதுவை வ.சுப்பையாவின் நெருங்கிய தோழரான இவர், இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். பாரீஸ் தமிழ்ச் சங்கத் தலைவராக பல ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com