பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஜன.17 முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வருகிற17-ஆம் தேதி முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜூ தெரிவித்துள்ளார்.

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வருகிற17-ஆம் தேதி முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018ம் ஆண்டு மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கு தேர்வெழுத தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தத்கல்) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத்துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் முகவரியில் இயங்கும் சிறப்பு மையத்துக்கு ஜன.17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாள்கள் மட்டும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பதாரர் நேரில் வந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் தனியார் கணினி மையம் மூலம் விண்ணப்பிக்க இயலாது. இந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தின் மூலம் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான சேவை மையமானது, மேல்நிலைக் கல்வி தேர்வு பிரிவு, 4-ஆம் தளம், பள்ளி கல்வி இயக்ககம், அண்ணா நகர், புதுச்சேரி - 5 என்ற முகவரியில் இயங்கும்.
விண்ணப்பிக்க விரும்புவோர்: எச்பி வகையினர் அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து ரூ.150, இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்-லைன் பதிவு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.235 செலுத்த வேண்டும். இதனுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000-ம் செலுத்த வேண்டும்.
தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணைக் கொண்டே தேர்வு தொடர்புடைய அனைத்து தொடர் செயல்களையும் மேற்கொள்ள இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com