பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

புதுவையில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

புதுவையில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புதுவை அரசின் சுற்றுச்சூழல் தகவல் மையம் இணைந்து ஊசுடு மற்றும் கோர்க்காடு ஏரியில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் பறவைகள் உற்றுநோக்கல் நிகழ்ச்சியை சனிக்கிழமை தொடங்கின.
பறவைகள், அதன் வாழிடங்களின் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம் என்ற தலைப்பில் நிகழ் ஆண்டின் பொங்கல்பறவை கணக்கெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பறவைகள் பார்த்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் பங்கெடுத்து கொள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே எடுத்துச் சொல்லும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 125 பறவை ஆர்வலர்கள் கலந்துகொண்ட பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் ங்ஆண்ழ்க் என்ற இணையத்தில் உள்ளிடுவது எப்படி என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
காகம், மைனா, கரிச்சான் குருவி, அண்டங்காக்கை, பச்சைக்கிளி, மடையான், வெண்மார்பு மீன்கொத்தி, பனை உழவாரன், மணிப்புறா உள்பட எண்ணற்ற பறவைகளை பற்றி விளக்கமும் பறவைகள் பற்றிய பாடல்களும் பாடப்பட்டன.
மேலும் மாணவர்களுக்கு விளக்கக் கையேடு வழங்கப்பட்டது. இறுதியாக மாணவர்கள் பறவைகள் பற்றிய வினாடி-வினா போட்டிகளில் பங்கேற்றனர். ஜன.16-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சியை புதுவையில் அறிவியல் இயக்கம் சார்பில் முன்னெடுத்து நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு நிகழ்ச்சியில் 37 வகையானபறவையினங்கள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கிடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பறவை ஆர்வலரும், தமிழ் நாடு அறிவியல் இயக்க பறவையியல் கழக செயலாளருமான கணேஷ்வர், புதுவை பறவையியல் கூட்டமைப்பின் சுரேந்தர், புதுவை அரசின் சுற்றுச்சூழல் துறை விஞ்ஞானி விபின், புதுவை அறிவியல் இயக்க பொதுச்செயலாளர் ஹேமாவதி, செயலாளர் அருண் நாகலிங்கம், விஜயமூர்த்தி, ராஜ்குமார், அரவிந்தராஜா, குலசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளிகளில் இருந்து 70 மாணவர்களும், துளிர் இல்லங்களிலிருந்து 50 மாணவர்கள் உள்பட 140-க்கும் மேற்பட்டோர்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com