கால்நடை மருத்துவப் படிப்பு: நவ. 5 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவ மேற்படிப்புக்கு நவ. 5}ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்தது.

புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவ மேற்படிப்புக்கு நவ. 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்தது.
புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள கால்நடை மருத்துவப் பட்டமேற்படிப்பு (எம்.வி.எஸ்சி) இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பாடப் பிரிவில் மொத்தம் 29 இடங்கள் உள்ளன. இவற்றில் புதுவை மாநில மாணவர்களுக்கு 18 இடங்களும், பிற மாநில மாணவர்களுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்படும்.
தகுதியுள்ள மாணவர்கள் www.centacpuducherrry.in என்ற சென்டாக் இணையதளத்தில் நவ. 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு நவ. 15-ஆம் தேதி நடைபெறும்.
மேலும் விவரங்களை www.ragacovas.in என்ற ராஜீவ் காந்தி கல்நடை மருத்துவக் கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கெüடு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com