பழைய சாராய ஆலையை பண்பாட்டு மையமாக மாற்றும் பணி தீவிரம்

பழைய சாராய ஆலையை பண்பாட்டு மையமாக மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று  வருகிறது.

பழைய சாராய ஆலையை பண்பாட்டு மையமாக மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று  வருகிறது.
பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் குருசுக்குப்பம் கடற்கரை சாலையில்,  1.9 ஏக்கர் பரப்பளவில், 1916-ஆம் ஆண்டில் சாராய வடிசாலை அமைக்கப்பட்டது.  தொடக்க காலத்தில் வடிசாலை துறையால் இது நிர்வகிக்கப்பட்டது.  பின்னர், புதுச்சேரி சாராய வடிசாலை நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 
இங்கு தினமும் 12 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் உற்பத்தி செய்யப்பட்டது.  சாராய ஆலையால் நிலத்தடி நீர்மட்டம்,  கடல் நீர் மாசுபடுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 1997-ஆம் ஆண்டு கடற்கரை சாலையில் உள்ள சாராய ஆலை மூடப்பட்டு வில்லியனூருக்கு மாற்றப்பட்டது.  
தற்போது, இந்த இடத்தை பண்பாட்டு மையமாக மாற்ற புதுவை அரசு முடிவு செய்துள்ளது.  எனவே,  சாராய ஆலை கட்டடத்தை  இடிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பண்பாட்டு மையத்துக்கான வடிவமைப்பு தயார் நிலையில் உள்ளது.
எனவே, கட்டட இடிப்புப் பணி முடிந்ததும் ரூ.12 கோடி செலவில் பண்பாட்டு மைய கட்டடப் பணிகள் தொடங்கி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com