அருந்ததியர்கள் கோரிக்கை பேரணி

புதுவையில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி சமூகநீதிப் பேரணி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவையில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி சமூகநீதிப் பேரணி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 சமூக நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை பெரியார் சிலை அருகே தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தார்.
 சமூக நீதிக் கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கட்சியின் செயற்குழுத் தலைவர் ராஜேந்திரன், பொருளார் ஜெயராமன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் ராமசாமி, சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் வெள்ளமடை நாகராசன், ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் சென்றவர்கள் அருந்ததியர் என சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும், தலித் மக்களுக்கு பாட்கோ கடனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியை ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகே தடுப்புகளை அமைத்து போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் சட்டப்பேரவைக்குச் சென்று முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com