பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: இறுதி நாளில் 5 பேர் சிக்கினர்

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வெள்ளிக் கிழமையோடு நிறைவடைந்தது. இறுதித் தேர்வில் காப்பியடித்த 5 மாணவர்கள் பிடிபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வெள்ளிக் கிழமையோடு நிறைவடைந்தது. இறுதித் தேர்வில் காப்பியடித்த 5 மாணவர்கள் பிடிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-இல் தொடங்கியது. 268 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 20 ஆயிரத்து 422 மாணவர்களும், 21 ஆயிரத்து 644 மாணவிகளும் என்று மொத்தம் 42 ஆயிரத்து 66 பேர் 112 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு எழுதினர். இதில், தனித்தேர்வர்களாக 5 மையங்களில், 1,520 பேரும், 51 மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்றனர். 50 பறக்கும் படையினர் தேர்வுப் பணிகளை கண்காணித்தனர்.
இதில், வெள்ளிக்கிழமை (மார்ச் 31) கடைசி தேர்வாக, உயிரியல், தாவரவியல், வரலாறு மற்றும் வணிக கணிதத் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வை நிறைவு செய்து வந்த மாணவ, மாணவிகள், மகிழ்ச்சி கொண்டாட்டத்தோடு திரும்பினர்.
காப்பி அடித்த 5 பேர் சிக்கினர்: கடைசி நாள் தேர்வான வெள்ளிக்கிழமை, திண்டிவனம், விழுப்புரம் பகுதி தனியார் பள்ளி மையங்களில் தேர்வில் பங்கேற்ற, தனித்தேர்வு மாணவர்கள் 3 பேரும், பள்ளி மாணவர்கள் இருவரும் பறக்கும் படை சோதனையின்போது, துண்டு சீட்டு பார்த்து எழுதியதாக பிடிபட்டனர்.
ஏப்.5 முதல் விடைத் தாள் திருத்தும் பணி: பொதுத் தேர்வு முடிந்த நிலையில், தேர்வு விடைத் தாள்கள் திருத்தும் பணி, ஏப்.5-ஆம் தேதி தொடங்குகிறது. இப்பணி விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் நடைபெற உள்ளது.  இப்பணி, ஏப்.20 தேதிகள் வரை நடைபெறும் என்று, முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com