சுதந்திர தினத்தில் கிராம சபைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று(ஆக.15) கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று(ஆக.15) கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை, சுதந்திர தினத் தன்று(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெறும்.
 இந்தக் கூட்டத்தில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மேற்கொள்ளுதல், சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், மகளிர் திட்டம் தொடர்பான பொருள்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
 எனவே, இந்தக் கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கிராமத்துக்கு பகுதிக்கு வேண்டிய பொது தேவைகள் மற்றும் கருத்தை தெரிவிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com