பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரிக்கை

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.26 கோடி கொள்முதல் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.26 கோடி கொள்முதல் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
 தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் விழுப்புரம் -கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் அரிகரன் தலைமை வகித்தார். செயலாளர் அன்பரசு, பொருளாளர் லீமாரோஸ் சார்லஸ், கடலூர் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விழுப்புரம்- கடலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பாலுக்கு கடந்த 40 நாள்களாக ரூ.26 கோடி பணம் பட்டுவாடா செய்யாமல் உள்ளது. அந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், இனிமேல் 10 நாள்களுக்கு ஒருமுறை எந்தவித நிலுவையும் இன்றி முறையாக பால் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும், கிலோவுக்கு ரூ.2-க்கு வழங்கப்பட்டு வந்த மாட்டுத் தீவனத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், கடந்த நவம்பர் முதல் நிறுத்தம் செய்த மானியத் தொகையையும் கணக்கிட்டு வழங்க வேண்டும், விழுப்புரம் ஆவின் மூலம் உள்ளூர் பால் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
 ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு கர்நாடகம், குஜராத் மாநிலங்களைப் போல தமிழக அரசு மானியமாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு 60 வயது வரை இலவச காப்பீடும், 60 வயதுக்கு மேல் பால் உற்பத்தி செய்தவர்களுக்கு ரூ.1,500 ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், டிச.27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com