மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்: 13 பேர் கைது

விழுப்புரம் அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் சனிக்கிழமை இரவு காவணிப்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றார்.
 அப்போது, திருப்பச்சாவடிமேடு தென்பெண்ணை ஆற்றிலிருந்து அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த சாலாமேடு தட்சணாமூர்த்தி(52), நாராயணன்(45), காளிதாஸ்(38) , ஹரிராமன்(50) , மீனாட்சி நகர் ஜெயராமன்(57), சீனிவாசன்(45), ஈ.பி. காலனியைச் சேர்ந்த பாண்டியன்(40), ஆகியோரை கைது செய்தார்.
 இதேபோல, தாலுகா காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் சனிக்கிழமை இரவு கண்டியமடை பகுதியில் ரோந்து சென்றபோது, 6 மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த திருப்பச்சாவடி மேடு ராமு(75), சுந்தரமூர்த்தி(50), ஆறுமுகம்(50) சேகர்(45), கண்டியமடை முத்துவேல்(25), விஜயகுமார்(26) ஆகிய 6 பேரை கைது செய்தார்.
 மாட்டுவண்டிகள் மாயம்: மணல் கடத்தல் வழக்குகளில் சனிக்கிழமை இரவு 13 மாட்டு வண்டிகள் தாலுகா போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிப்பட்டது. ஆனால், அந்த 13 மாட்டு வண்டிகளும் தாலுகா காவல் நிலையத்துக்கும் கொண்டு வரப்படவில்லை, வருவாய்த் துறையிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 அப்படியென்றால், மாட்டு வண்டிகள் வருவாய்த்துறையிடம் அபராதம் செலுத்தும் முன்னரே காவல் துறையால் விடுவிக்கப்படுகின்றனவா அல்லது பறிமுதல் செய்யப்படாமல் கணக்கு காட்டப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
 இது குறித்து காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com