ஆள்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவி சாவு

திண்டிவனம் அருகே புதன்கிழமை ஆள்களைச் ஏற்றிச் சென்ற சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

திண்டிவனம் அருகே புதன்கிழமை ஆள்களைச் ஏற்றிச் சென்ற சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள பணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். அதே கிராமத்தில் உள்ள தனது குலதெய்வக் கோயிலில் சிவக்குமார் புதன்கிழமை காலை குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிபட்டார். இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரத்தில் புதன்கிழமை மாலை நடைபெற இருந்த காதணி விழாவில் பங்கேற்க சிவக்குமார் தனது உறவினர்களுடன் சிறிய சரக்கு வாகனத்தில் புறப்பட்டார். வாகனத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். மாலை 5 மணி அளவில் திண்டிவனம் அருகே மயிலத்தை அடுத்த பொன்னம்பூட்டி கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 இந்த விபத்தில், இளையாண்டிப்பட்டியைச் சேர்ந்த பூபாலன் மகள் துளசி (19), மணலிப்பட்டு விஜயக்குமார் மகள் சர்மிளா (6). மணி மகள் தீபா (28), ஹரிகரன் மனைவி அஞ்சலை (37) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
 அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, புதுச்சேரி மண்ணடிப்பட்டு அரசு மருத்துமனையில் சேர்த்தனர். மருத்துமனைக்கு செல்லும் வழியிலேயே துளசி உயிரிழந்தார். இவர், திண்டிவனம் அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com