கருணாநிதி பிறந்த நாள் விழா பட்டிமன்றம்

திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் திமுக சார்பில் பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் திமுக சார்பில் பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி, விழுப்புரம் நகர திமுக மற்றும் தொ.மு.ச. சார்பில் விழுப்புரம் மந்தகரைத் திடலில் பட்டிமன்றம் மற்றும் நலத் திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. தொ.மு.ச. பொதுச் செயலாளர் சேகர் வரவேற்றார்.
 மாவட்ட அவைத் தலைவர் ராதாமணி, தளபதி நற்பணி மன்றத் தலைவர் பொன்.கௌதமசிகாமணி, மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 திமுக தலைவர் கருணாநிதியின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அரசியல் ஆற்றலா, இயக்கியத் திறனா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
 தலைமைக்கழக இயக்கிய அணிச் செயலாளர் தஞ்சை கூத்தரசன் நடுவராக இருந்தார். அரசியலிலே என்ற தலைப்பில் சூர்யா வெற்றிகொண்டான், இளங்கோவன் ஆகியோரும், இலக்கியமே என்ற தலைப்பில் கந்திலி கரிகாலன், செங்கை தாமஸ் ஆகியோரும் பேசினர்.
 இதைத் தொடர்ந்து, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com