ரயில் நிலையத்தில் யோகாசனம்

உலக யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி யோகா மற்றும் யோகா விளையாட்டு வளர்ச்சிச் சங்கம் சார்பில் விழிப்புணர்வை

உலக யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி யோகா மற்றும் யோகா விளையாட்டு வளர்ச்சிச் சங்கம் சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
 ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, பொதுமக்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி யோகா மற்றும் யோகா விளையாட்டு வளர்ச்சி சங்கம் ஓடும் ரயிலில் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
 இதில், புதுவை முதலியார்பேட்டை தனியார் யோகா பயிற்சி மையத்தைச் சேர்ந்த யோகா மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து காலை 8.10 மணியளவில் பயணிகள் ரயிலில் புறப்பட்டு விழுப்புரம் வரை யோகாசனம் செய்தபடியே வந்தனர். இதில், பத்ம விரிச்சிகாசனம், அஷ்டவர்க்காராசனம், புஜங்காசானம், பச்சிமுதனாசனம், பத்மவட்டனாசனம், ஏக்க அஷ்ட பத்ம மயிராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் இடம் பெற்றன. இந்த யோகக் கலையை 2 வயது குழந்தை முதல் 85 வயது முதியவர் வரை ஆர்வமுடன் பங்கேற்று செய்து காட்டினர்.
 விழுப்புரம் வந்தடைந்த பிறகு, அவர்கள் அனைவரும் ரயில் நிலையத்திலும் யோகாசனத்தைத் தொடர்ந்தனர். 4-ஆவது நடைமேடைக்குச் சென்ற அவர்கள் பல்வேறு ஆசனங்களை அங்கு செய்து காட்டினர். பின்னர், மீண்டும் விழுப்புரத்திலிருந்து பயணிகள் ரயிலில் ஏறி யோகாசனங்கள் செய்தபடியே புதுச்சேரிக்குச் சென்றனர். முன்னதாக, யோகாசன நிகழ்ச்சியை புதுச்சேரி ரயில் நிலையத்தில் புதுச்சேரி மாநில நலத் துறை அமைச்சர் கந்தசாமி தொடக்கி வைத்தார். புதுச்சேரி யோகா மற்றும் யோகா விளையாட்டு வளர்ச்சிச் சங்க பொதுச் செயலாளர் தசரதன், யோகா கலை நிபுணர் உமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com